குமார் பக்கம்

குமார் ரங்கசாமி எனும் நான்

செய்யும் எல்லா விஷயங்களிலும் என்னை ஈர்க்கும் பொதுவான விஷயம் என்பது கதைசொல்லல். என் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள், கணிப்பொறித் துறையில் நான் உருவாக்கும் மென்பொருள், எல்லாவற்றுள்ளும் உள்ளுறையும் கதை ஒன்று உள்ளது. யாருடைய கதைகள் இது? என்ன சொல்ல வருகிறது அது? என்னின், உங்களின், நம்மின், நம் சமூகத்தின், மானுடத்தின், பிற உயிர்களின், இந்த உலகின் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தின் கதைகள். அதை வாசகர்களுக்கும், (மென்பொருள்) பயனாளர்களுக்கும் கடத்துவதில் தான் வெற்றி உள்ளது. அது சவாலானது, அதனால் தான் அதில் ஒரு சாகசத்தன்மை உள்ளது. அது தான் நான் விரும்புவது. இதற்கு அப்பால், நம் எல்லோருடைய செயல்களையும் எங்கோ ஒரு புள்ளியில் இணைக்கும் புதிரான ஒரு மெல்லிய மாயச் சரடு. அதனைப் புரிந்துகொள்ள முயலும் மானுடரின் முயற்சிகள். என் எழுத்து என்பது என் பார்வையில் நான் காணும் உலகு. என்னைத் தவிர யாராலும் சொல்ல முடியாதது. உங்கள் வருகைக்கு நன்றி.

குமார் பக்கம்
Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com