தேவதை
Posted on May 27, 2022 • 1 minutes • 48 words
கதவைத் திறந்தேன்.
ஆரத்தழுவி என்னை
அழைத்துச் சென்றாள்
விட்டு வந்த இடத்திலேயே
அங்கேயே.. அப்படியே..
எதிர்பார்த்துக் காத்திருந்த
நினைவுகளெனும் தேவதை
என் கை பிடித்து
அழைத்துச் சென்று
கதையாக்கி காட்சியாக்கி
காட்டி மகிழ்கிறாள்
நான் கொண்ட
மகிழ்ச்சியும் மருட்சியும்
இன்பமும் துன்பமும்
ஆனந்தமும் அழுகையும்
ரம்மியமும் ரணமும்
துடைத்து அழிக்க மனமின்றி
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
விட்டுச் சென்ற
மூச்சுக் காற்றின்
சில மிச்சங்கள்
புதைத்திருக்கும் குப்பைகளை