சுடர் Posted on April 7, 2022 • 1 minutes • 37 words மனதின் இருள் அகற்றும் சுடர் ஒன்றை ஏந்தித்தான் வருகுது ஒவ்வொரு இடரும் அதனின் அனல் பெருக்கும் ஒளி தன்னில் உருகித்தான் மறையுது தான் எனும் அகமும் பிறர் தவறை சுட்டும் வேளை தோறும் பெருகித்தான் வளருது நஞ்செனும் மரமே உயர் நிலை தரும் உன்னதம் அது தன்னின் பொறுப்பேற்கும் நெஞ்சினின் உரமே