குமார் பக்கம்
May 8, 2021

ஆளுக்கொரு திரை

Posted on May 8, 2021  •  1 minutes  • 111 words

People in metro

சில மாதங்களுக்கு முன், என் வீட்டில் இருந்து சுமார் 40 மைல் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு ஒரு கருத்தரங்கிற்குச் செல்ல வேண்டி இருந்தது. காரில் போனால் அங்கே போய் நிறுத்த இடம் தேட வேண்டும் என்பதால், தொடருந்தில் சென்றேன். நிறைய முறை சென்றது தான் என்றாலும், இந்த முறை, இந்தப் பயணம் முழுவதும், என் கைபேசியை பார்ப்பதில்லை என்ற முடிவில் சென்றேன். எந்தவொரு பெரிய காரணமும் இல்லை. ஏதோ தோன்றியது. நாம் இன்று நம்மைச் சுற்றி இருப்பவற்றையும், இருப்பவர்களையும் பார்த்து, உலகம் உணர்வோம் என்ற ஒரு ஆசை. அப்போது பார்த்து உணர்ந்ததே இவ்வரிகள்.  

Photo by Alexander Schimmeck on Unsplash
பி. கு: இந்தப் புகைப்படம் அன்று எடுத்ததல்ல. 


**

ஆளுக்கொரு திரை

 

வற்றா ஆற்றுப்
பெருக்காய் இணையம்
வழியே மட்டும் உலகிணையும்
முற்றா இளமக்கள்

இவர்..

அருகமரும் மனிதர்
உருஉணர்வோ அறியார்
நகரும் வெளி உலகத்
தருணமதைப் புரியார்

வாள் ஒளியும்
உரை போல
பால் மறைக்கும்
நுரை போல்

ஆளுக்கொரு திரை!!!

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com