குமார் பக்கம்
August 2, 2017

பாவக்கா கத

Posted on August 2, 2017  •  2 minutes  • 421 words

மணி பத்துக்கு மேல ஆச்சு. லைட் ஆப் பண்ணுங்கடா. தூங்கலாம்.

விளக்கு அணைந்ததும் அருகில் வந்து படுத்துக் கொண்டு, மகள் சொன்னாள்..

டாடி.. கட கடனு ஒரு கத சொல்லு

என்னது.. ? கட கடனு சொல்லனுமா?

ஆமா.. கட கடனு சாப்பிடணும்னு சொன்னீல்ல, அது மாரியே

ஓஹோ. சரி. என்ன கத சொல்லலாம்

ம்ம்.. லயன் கத சொல்லு

லயன் கத போர் அடிக்குது மா. நா உனக்கு இன்னொரு கத சொல்றன். இதுக்கு பேரு என்ன தெரியுமா? பாவக்கா கத.

ஓ .. பாவக்கா கதையா. அது என்னது? புதுசா இருக்கே.

ஒரு ஊர்ல ஒரு குட்டி பாவக்கா இருந்துச்சாம். அது மொதல்ல வெள்ள கலர்ல இருந்துச்சாம். ஆனா அதுக்கு அது பிடிக்கவே இல்லயாம். அதுக்கு கலர் வேணும்னு நெனைச்சுதாம். என்ன பண்றதுன்னே தெரியலியாம்.

அச்சோ பாவம்.

அப்போ அந்த வழில ஒரு ஆப்பிள் போயிட்டிருந்துச்சாம். ஆப்பிள் என்ன கலர் இருக்கும்?

ம்ம்.. ரெட் கலர். அப்பறம் க்ரீன் கலர்..

ஹாங். சரி. பாவக்காக்கு ரெட் கலர் பிடிக்காது. ஆனா க்ரீன் கலர் ரொம்ப பிடிச்சிருச்சு. உடனே அது ஆப்பிள் கிட்ட கேட்டுச்சு. நான் க்ரீன் கலர் ஆகணும். என்ன பண்ணனுமு கேட்டுச்சு. உடனே ஆப்பிள், எனக்கு ஒரு பிரென்ட் இருக்கா. அவ பேரு குளோரோபில். அவ தா எனக்கு க்ரீன் கலர் கொடுத்தா. அவ கிட்ட கேட்டு பாருன்னு சொல்லிச்சு. உடனே, பாவக்கா போய் குளோரோபில் கிட்ட, ஏய் எனக்கும் க்ரீன் ஆப்பிள் க்கு கொடுத்த மாரியே க்ரீன் கலர் கொடுன்னு கேட்டுச்சு. உடனே, குளோரோபில், நான் தர மாட்டேன்னு சொல்லிருச்சு. ஏ அப்படி சொல்லிச்சு?

ஏன்னா, குளோரோபில் க்கு குறும்பு.

ஆமா, குறும்பு தான். ஆனா குளோரோபில் க்கு இல்ல. பாவகாக்குத்தான்.

ஏ?

ஏன்னா, பாவக்கா சரியாவே கேக்கல. ரொம்ப ராங்கா கேட்டுச்சு. எப்படி கேக்கணும்? எனக்கும் குடுக்கிறயா ப்ளீஸ் அப்படினு தானே கேட்டிருக்கணும்?

ஓஹோ. அதனாலயா ?

ஆமா. உடனே பாவக்கா போய் அவங்க அம்மா கிட்ட சொல்லிச்சு. அவங்க அம்மா, நீ போய் சரியா கேளுன்னு அனுப்சாங்க. அது மறுபடியும் போய் குளோரோபில் கிட்ட, எனக்கு க்ரீன் கலர் கொடுக்கிறியா ப்ளீஸ் னு கேட்டுச்சு. ஆ. அப்படி கேளுன்னு சொல்லிட்டு, அதுவும் க்ரீன் கலர் கொடுத்துச்சு. உடனே பாவக்கா அத சாப்டுட்டு பாத்தா அது க்ரீனே ஆகல. எதுனாலயா இருக்கும்?

நீதா சொல்லணும்..

சரி. சொல்றேன். அதுக்கு கோவம் வந்து ஆப்பிள் கிட்ட போச்சு. ஆப்பிள் கிட்ட கேட்டுச்சு. உன் ஃப்ரண்ட் எனக்கு க்ரீன் கலர் கொடுக்கறன்னு சொல்லி ஏமாந்திரிச்சு. அப்படினு சொல்லிச்சு. உடனே, ஆப்பிள், நடந்தது என்னனு கேட்டுட்டு, அடடே, நீ சரியா கேட்காம வந்திட்ட. நீ க்ரீன் ஆகணும்னா, உனக்கு இன்னும் ரெண்டு ஃப்ரண்ட்ஸ் ஹெல்ப் பண்ணனுமு சொல்லிச்சு.

ஹையோ. இன்னும் ரெண்டு பேரா ? அவங்க யாரு?

அது தான் சூரியன், அப்பறம் தண்ணி. இவங்க எல்லாம் சேந்து தான் உனக்கு க்ரீன் கலர் தருவாங்க ன்னு சொல்லிச்சு. உடனே பாவக்காயும் போய் சன் கிட்ட கொஞ்சம் வெளிச்சம் வாங்கி, தண்ணி கொஞ்சம் குடிச்சு, குளோரோபில் கிட்ட கலர் வாங்கி எல்லாத்தையும் ஒண்ணா பண்ணனப்போ – அதுக்கு என்ன வந்துச்சி?

ஹே. க்ரீன் கலர்.

கரெக்ட். இப்போ, பாவக்கா எதுக்கு சாப்பிடணும்னு தெரியுமா?

அது சாப்ட்டா ஸ்ட்ரென்த் வரும் (மீசையை முருக்குவது போல் பாவனை செய்தாள்)

சரி, எஎனக்கு தூக்கம் வருது. தூங்கலாமா?

ம்ம்ம். இன்னொரு கத சொல்லு.. ப்ளீஸ்

என்னது… மறுபடியுமா? நா தூங்கறேன் போ.. கொர் ….. கொர்.

******

இரண்டு நாட்களுக்குப் பிறகு..

எதோ வேலையாய் இருக்கும் போது, ஓடி வந்தாள். கையில் சிறிதாக நறுக்கப்பட்ட சமைக்காத பாவக்காய். வந்து என்னிடம் காட்டி, ஒரு கடி கடித்துக் காட்டினாள்.

ஒய், கசக்குமே. எப்படி சாப்பிடற? என்று கேட்டேன்.

எனக்கு கசக்கவே இல்ல. என்று சொல்லிவிட்டு, மேலும்…

பாத்தியா, எனக்கு எப்படி ஸ்ட்ரென்த் வருதுன்னு?

கண்களை உருட்டி மீண்டும் மீசையை முருக்குவது போல் பாவனை.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com