குமார் பக்கம்
July 16, 2015

நான், நீ, நாம் – 2

Posted on July 16, 2015  •  3 minutes  • 594 words

Who am I

Photo by Greg Rakozy on Unsplash

இன்றைய சூழலில் வாழ்க்கை தரத்தை பொருளாத ரீதியாக உயர்த்திக் கொள்ள பல வழிகளும், வாய்ப்புகளும் உள்ளன. சில குறிப்பிட்ட வேலைகளுக்கு உலகில் எந்த மூலையில் இருந்தும் வேலை செய்யும் வகையில் வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் சில நாடுகள் தவிர பொதுவாக எல்லா நாடுகளிலும் பொருளாதாரமும் வேலை வாய்ப்புகளும் நன்றாகவே இருக்கின்றன.

ஆனால், ஒரு மனிதனின் சந்தோஷம் மற்றும் மன நலனை உயர்த்துவது எப்படி? ஏனெனில் சந்தோஷம் என்பது வெறும் பணமும், வேலையும் மட்டுமே சார்ந்தது அல்ல. இதைப் பற்றி பல ஆராய்சிகள் நடத்தப்பட்டு இருக்கிறது. நடந்து கொண்டும் உள்ளது. Happiest countries in the world, Happy Planet Index என்று பல அளவீடுகளாக இது பேசப்படுகிறது. இது எவ்வாறு கணிக்கப் படுகிறது மற்றும் என்ன காரணிகள் இதற்கு அளவீடுகளாக எடுத்துக் கொள்ளப் படுகிறது என்பதை பற்றி பிறகு விரிவாக பார்போம். இப்போதைக்கு, இதில் இருந்து ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். அது, மன நலன்.

மன நலன் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். என்னென்ன விஷயங்கள் மன நலனை பாதிக்கின்றன என்பதை ஒரு சில வரிகளுக்குள் அடக்கி விட முடியாது. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் ஒரு விஷயமும் ஆகும்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காரணி, உறவுகள். இதில், மூன்று முக்கிய கோணங்கள் உள்ளது. அது, “நான், நீ, நாம்”.

நான் – யார்?

அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் முதன்மையான விஷயம் “தன்னை” அறிந்து கொள்ளுதல். நான் ஏன் பிறந்தேன் என்ற ஆன்மிக, சித்தாந்த அறிவைப் பற்றியோ, தேடுதல் பற்றியோ இங்கே பேசவில்லை. மாறாக, என்னுடைய பலம் / பலவீனம், குறை / நிறை பற்றி “நான்” என்ன தெரிந்து வைத்திருக்கிறேன் என்பதைப் பற்றியது. ஏனெனில், என்னை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களும், “நான் அதற்கு என்ன அர்த்தம் கொடுக்கிறேன்” என்பதைப் பொறுத்து இருக்கிறது. அந்த அர்த்தம் என் அனுபங்களின் வழியாக வருவது.

ஒரு இரண்டு வருடம் முன்பாக வந்த செய்தி (சுருக்கமாக):
மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 கிளம்பி சில நிமிடங்களில் வழி தவறி வேறு பாதையில் சென்று மறைந்து விட்டது. இன்று வரை ஒரு தகவலும் இல்லை. சுமார் இரண்டு மாதத்திற்கும் மேல் ஆகியியும் இது வரை ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. விமானத்தின் போக்கையும், அது நீண்ட நேரம் வேறு பாதையில் பயணித்தது என்பதையும் வைத்து Pilot மீது கூட சந்தேகம் இருக்கிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமே திவால் ஆக கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இது தான் செய்தி. இப்போ, இந்த செய்தியை படிக்கும் “நான்” …

  1. * சமீபத்தில் நிறைய விமான விபத்துக்களை பற்றிய செய்திகள் படித்த ஒரு சாதாரண பயணி * யாக இருந்தால், “நான்” இதை புரிந்து கொள்ளும் விதம்:
    அய்யோ சாமி.. இந்த விமான பயணமே ஆபத்தானது தான். வர வர இந்த airlines எல்லாம் சுத்த பொறுப்பே இல்லாமல் இருக்காங்க. இன்னக்கு இருக்குற டெக்னாலஜி வச்சு ஒரு செல்போன் எங்கே இருக்குன்னு சுலபமா கண்டு பிடிக்க முடியுது. இம்மாம் பெரிய flght எங்கே இருக்குன்னு இவங்களாலே இன்னும் கண்டு பிடிக்க முடியல. என்னமோ சொல்லாம மறைக்குறாங்க..

“நான்” இப்படி புரிந்து கொள்ள காரணம்:
– நான் வாசித்த செய்திகளில் ஒன்றில், ஒரு airlines நிறுவனம், அவர்களுக்கு தெரிந்த சில விஷயங்களை சொல்லாமல் மறைத்து விட்டனர் என்று படித்தது (மேலும் அது உண்மை தான் என்று நம்புவது).
– சமீபத்தில் என் செல்போன் தொலைந்து போய், நான் என் செல்போனில் install செய்து வைத்திருந்த application மூலம் அது எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து எடுத்தது (அதனால் flight sensors வழியாக கண்டு பிடிக்க வழி இருக்க வேண்டும் என்று நம்புவது.. அதை பற்றிய அறிவு இல்லாமல் இருந்தாலும் / அதன் சாத்தியங்கள் பற்றி தெரியாமல் இருந்தாலும் கூட,)

  1. * பல்லாயிரக்கணக்கான மைல்கள் விமானத்தை இயக்கிய Pilot * ஆக இருந்தால், “நான்” இதை அணுகும் விதம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்:
    ஹ்ம்ம். விமான கட்டுப்பாட்டு அறை தரும் தகவல்களை வைத்துப் பார்த்தால், கிளம்பி சில நிமிடங்களில் வழக்கத்திற்கு மாறாக இடது பக்கம் திரும்பி இருப்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். இடது பக்கமாக மிக அருகில் ஒரு விமான தளம் இருக்கிறது. கிளம்பி சில நிமிடங்களில் நடந்த எதோ ஒரு விஷயம், ஒரு விமான தளத்தை உடனடியாக அணுக வேண்டி இருந்திருகிறது. மேலும் படிக்க:

“நான்” இப்படி அணுக காரணம்:
– ஒரு Pilot ஆக இதற்கு முன்னால் என் அனுபவம்
– இது போன்ற சந்தர்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி

ஒரு சராசரி பயணிக்கு இந்த அனுபவங்களோ, பயிற்சியோ கிடையாது. அதனால், ஒரு Pilot இதை அணுகும் விதத்திற்கும் ஒரு சராசரி பயணி இதை அணுகும் விதத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இது வெறும் இரண்டு உதாரணங்கள் தான். இந்த வேறுபாடு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருந்தும்.

ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய “நான்” எனும் கண்ணாடி வழியே தான் உலகத்தை பார்க்கிறான். காலம் அந்த கண்ணாடியின் தடிமனை, நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. நம் பார்வையும் அதனால் மாறிக் கொண்டே இருக்கிறது.

கோச்சடையான் படத்தில் வரும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் ..
“நீ என்பது பெயரா, உடலா, உயிரா? இவை எதுவும் இல்லை.. செயல்.”

உன் செயலல்கள் மட்டுமே நிற்கும் என்ற விதத்தில் எழுதப்பட்டது இது. இதை கொஞ்சம் நீட்டிப் பார்த்தால்…

நான் என்பது பெயரோ, உடலோ, உயிரோ, வெறும் செயலோ மட்டும் அல்ல. செயலும் அதன் விளைவுமே, நான்.

Follow me

I am mostly reachable via these mediums. Or via my email: kumareshind@gmail.com